மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது :

By செய்திப்பிரிவு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, இரு தினங்களுக்கு முன்னர் வரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக இருந்தது. அதிக நீர்வரத்தால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று நீர்மட்டம் 110.45 அடியாக உயர்ந்தது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரத்து 795 கனஅடியில் இருந்த நீர்வரத்து நேற்று13 ஆயிரத்து 172 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து, காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர் இருப்பு79.05 டிஎம்சி-யாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்