உளுந்தூர்பேட்டையில் தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி மறியல் :

By செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டையில் உள்ள நரிக்குறவர்களின் தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரி அவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வடிகால்களை சீர மைக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உளுந்தூர் பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் நரிக் குறவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகள் போதிய பராமரிப் பின்மையால் சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் குடியிருப்பு களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு அவர்கள் குடியிருப்பினுள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறையில் முறையிட்டும் எவ்வித பலனும் ஏற் படவில்லை.

தற்போது பெய்துவரும் தொடர் மழையால் அவர்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகி கடந்த சில தினங்களாக தூக்கமிழந் துள்ளனராம். எனவே தங்களது குடியிருப்புகளை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி நேற்று விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமரசம் பேசினர். குடியிருப்பை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்

40 ஆண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப் பின்மையால் சேதமடைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்