கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடுக :

By செய்திப்பிரிவு

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க பெரியசெவலை செங்கல் வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெரியசெவலையில் உள்ள செங் கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கோரிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. செங்கல்வராயன் கூட்டு றவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஜோதிராமன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொது செயலா ளர் டி.ரவீந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டின் போது, ஒரு டன் கரும்புக்கு மத்திய மாநில அரசுகள் ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும், வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்து, மாநில அரசு பரிந்துரை விலையை வழங்கவேண்டும். கரும்பு ஏற்றிவரும் வாகனத்தின் எடையை அளவீடு செய்து உடனுக்குடன் விவசாயிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். இலவச மின்சாரத்தை பறித்திடும் 2020 மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை சர்க் கரை ஆலை ஊழியர்களுக்கு வழங்கவேண்டும். ஆலை வளாகத்தில்கரும்பு வாகனம் நிறுத்தமிடத் தில் சிமெண்ட் தளம் அமைக்கவேண்டும். ஆலை மருத்துவ மனையில் உடனடியாக மேம்படுத்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்