தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை போது முதல்வர் ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம்விடும் முறையை எளிமையாக்கி,சம்பந்தப்பட்ட காவல் கண் காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
அதன் முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள காவல் நிலை யங்களில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட உரிமை கோராதவாகனங்களை பொது ஏலம்விட உத்தரவிடப்பட்டது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களான வானூரில் 21, அவலூர் பேட்டையில் 13, பிரம்மதேசத்தில் 14, மயிலத்தில் 20என 148 இருசக்கரவாகனங்கள் மீது ஐபிசி 102 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வாகனங்கள் ஏலம் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago