சிறையிலிருந்து குற்ற செயல்கள் நிகழ்த்தப்பட்டால் - சிறை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் சிறையில் உள்ள குற்றவாளிகளால் வெளியில் உள்ளவர்களை வைத்து கொலைக் குற்றம் நடத்தப்படுகிறது என்றால் அதன் முழு பொறுப்பும் சிறை நிர்வாகத்தையே சாரும். சிறையி லிருந்து குற்ற செயலில் ஈடுபட் டால் ஒட்டுமொத்தமாக சிறை நிர்வாகத்தையே பொறுப்பாக்கி அவர்கள் மீது முதலில் வழக் குப்பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை நிர்வாகம் முழுமையாக தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசின் நேரிடை கட்டுப்பாட்டில் சிறை நிர்வாகம் செயல்பட மாநில அரசு அனுமதிக்க வேண்டும். புதுச்சேரி சிறை நிர்வாக பாதுகாப்பை மத்திய காவல் படையின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையின்றி கிடைப்பதும், அதன்மூலம் இளைஞர்கள் சீரழிவதும் தொடர் கதையாகி வருகிறது. சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கூலிப்படையினரின் ஆதிக்கம் மற்றும் தொடர் குற்றம் புரிவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

முதல்வர், உள்துறை அமைச்சர், காவல்துறை, நீதித் துறை, நிர்வாகத்துறை உள்ளிட் டவர்களின் கூட்டு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்