காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய கலைப்போட்டி :

பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் கலா உத்சவ் போட்டிகள் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாட்டு, கருவியிசை, நடனம் உள்ளிட்ட போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இப்போட்டிகள் பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன.தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒவியம், களிமண்ணில் பொம்மை செய்வது, கிராமியப் பாடல், நாட்டியம், இசை, பாட்டு என மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். சிவகங்கையில் இன்று (நவ.1) மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்