வாகனங்களுக்கான காலாவதி காலத்தை 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என சேலம்மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 73-வது ஆண்டு மகாசபை கூட்டம் சேலம் நெய்க்காரப்பட்டியில் நடந்தது. மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் தனராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். இதில், தலைவராக தனராஜ், கவுரவத் தலைவராக கிருஷ்ணசாமி, செயலாளராக குமார், பொருளாளராக செந்தில் குமார் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
கூட்டத்தில், ‘சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமாக லாரிகள் உள்ளன. இவை தவிர, வெளிமாநில, வெளி மாவட்ட லாரிகள் தினமும் ஆயிரக்கணக்கில் சேலம் வந்து செல்கின்றன.
எனவே, செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டை மைதானத்தில் லாரி நிலையம் அமைக்கசேலம் மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 ஆண்டுகள் நிறைவடைந்த பழைய வாகனங் களை அழிக்க கொண்டு வந்துள்ள ‘ஸ்கிராப்பிங்பாலிசி’-யால் லட்சக்கணக்கான லாரிகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, லாரி உள்ளிட்ட வாகனங்களின் காலாவதி காலத்தை 15 ஆண்டில் இருந்து,20 ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago