நாமக்கல்லில் ரூ.40.75 லட்சம் மதிப்பில் 4 புதிய மின்மாற்றிகள் அமைப்பு :

நாமக்கல் என்ஜிஜிஓ காலனி, ராஜீவ்காந்தி நகர், இபி காலனி லட்சுமி நகர் மற்றும் வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.40.75 லட்சம் மதிப்பீட்டில் 500 கிலோவாட் திறனுள்ள 4 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பெ. ராமலிங்கம் தலைமை வகித்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மின் மாற்றிகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 44 புதிய மின்மாற்றிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல்லில் 4 இடங்களில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் 500 மெகாவாட் திறன் கொண்ட 4 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன, என்றார்.

முன்னாள் எம்.பி., பி.ஆர். சுந்தரம், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE