பயணிகள் நிழற்குடை, ரேஷன் கடை திறப்பு :

திருச்சி: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் 2 இடங்களில் பயணிகள் நிழற்குடை, லால்குடி ஒன்றியத்தில் ரேஷன் கடை ஆகியவற்றை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் புள்ளம்பாடி ஒன்றியம் குமுளுர் மற்றும் கண்ணாக்குடி ஆகிய ஊராட்சிகளில் புதிதாக பயணிகள் நிழற்குடைகள் கட்டப்பட்டன.

இதேபோல, லால்குடி ஒன்றியம் சேஷசமுத்திரம் ஊராட்சியில் ரூ.13.80 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இவற்றை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.

அப்போது, ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதுடன், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் சு‌.சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன் (லால்குடி), ந.தியாகராஜன் (முசிறி), லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் எம்.பத்மகுமார், ஏ.திவ்யா, ஒன்றியக் குழுத் தலைவர் டி.ரவிச்சந்திரன், ரஷியா ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்