தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்கு விடுமுறை நாளான நேற்று பொதுமக்கள் கூட்டம் கடைவீதிகளில் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள ஜவுளி கடைகளுக்கு நேற்று துணி உள்ளிட்டவற்றை வாங்க மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தனர்.
இதனால், புதுக்கோட்டை நகரில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும், கிழக்கு ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, அண்ணா சிலை, பிருந்தா வனம், ஆலங்குடி சாலை, பழைய பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாலை யோரக் கடைகளில் துணிகள், பாத்திரம், பேன்சி பொருட்கள், காலணி, பாய் உள்ளிட்டவை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
எனினும், அவ்வப்போது மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
இதேபோல, கரூர் ஜவஹர் கடைவீதி, கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் வாங்கவும் பொதுமக்கள் நேற்று அதிகளவில் குவிந்தனர்.
மழை தூறியபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஏராள மானோர் திரண்டதால், கடைவீதி களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல, குளித்தலையிலும் மக்கள் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்க கடைவீதியில் அதிகளவில் குவிந்தனர்.
திருச்சியில் என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, மேலரண் சாலையில் உள்ள கடைகளில் தீபாவளி ஜவுளி, பொருட்கள் வாங்க மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago