ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் - திருச்சியில் 3 டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை : போலீஸாரை வாழ்த்தி முழக்கமிட்ட மதுப்பிரியர்கள்

ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகாரின்பேரில், திருச்சியில் 3 டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதையறிந்த மதுப்பிரியர்கள் விசிலடித்தும், போலீஸாரை வாழ்த்தியும் தங் களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும்போது ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.5 அல்லது ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விற்பனையாளர்கள் மீது மதுப்பிரியர்கள் நீண்டகா லமாக புகார் கூறி வருகின்றனர். நிர்ணயித்த விலைக்கே மது விற்பனை செய்ய வேண்டும், கூடுதலாக பணம் கேட்கக்கூடாது என டாஸ் மாக் பணியாளர்களுக்கு அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையை கட்டாயப்படுத்தி வசூ லிப்பதாக எழுந்த புகாரின்பேரில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், அருள்ஜோதி உள்ளிட்டோரை கொண்ட போலீ ஸார் 3 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் இரவு மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு ஹோட்டல் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் எலைட் ஷாப், விமான நிலைய சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவற்றில் சோதனையிட்டனர்.

அப்போது, கடைகளில் இருந்த மதுப்பிரியர்களை போலீஸார் வெளியே அனுப்ப முயன்றனர். அவர்களில் சிலர் மறுப்பு தெரிவித்தபோது, கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்ததால் இச்சோதனை நடைபெறுவதாகவும், தங்களுக்கு ஒத்துழைக்குமாறும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கூறினர்.

இதைக்கேட்ட மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்து, விசிலடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி வெளியே சென்றனர்.

ரூ.90 ஆயிரம் பறிமுதல்

3 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, 3 கடைகளில் இருந்தும் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை மதுப்பிரியர்களிடமிருந்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக வசூலித்ததில் கிடைத்த பணம் என தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட 3 கடைகளின் மேற்பார்வை யாளர்கள், விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் சிக்கியுள்ள 6 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு பரிந் துரை செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்