தூத்துக்குடியில் ஒற்றுமைக்கான ஓட்டம் :

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அவரது 146-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மினி மராத்தான் போட்டி 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற பெயரில் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில், பல்கலைகழகத்திலுள்ள 8 கல்லூரிகளில் இருந்து 80 மாண வர்கள் மற்றும் 52 மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் களுக்கான 5 கி.மீ. தொலைவு ஓட்டப்பந்தயம் மறவன்மடம் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், மாணவியருக்கான 3 கி.மீ. தொலைவு ஓட்டப்பந்தயம் கோரம்பள்ளம் பேருந்து நிறுத்த த்தில் இருந்தும் தொடங்கி, மீன்வளக் கல்லூரியின் விளை யாட்டு மைதானத்தில் நிறைவுற்றது.

போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் தொடங்கி வைத்து, வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.

மாணவர் பிரிவில் முதல் பரிசை சென்னை மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பி.திலிபன், 2-ம் பரிசை முட்டுக்காடு மீன்வள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஏ.ஆஷ்லின் ஜோயல், 3-ம் பரிசை நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரி மாணவர் வி.நிதிஷ் ஆகியோர் பெற்றனர்.

மாணவியர் பிரிவில் சென்னை மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி மாணவி எம்.பி.ஸ்நேகா முதல் பரிசையும், பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மாணவி டி.கல்பனா 2-ம் பரிசையும், சென்னை மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி மாணவி கே.அர்ச்சனா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கேப்டன் விஸ்வநாதன் கலந்து கொண்டார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி விளையாட்டு செயலாளர் பா.பார்த்திபன் வரவேற்றார். 'தேசிய ஒற்றுமை நாள்' உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து போட்டியை காவல் துணை கண்காணிப்பாளர் ம.உதயசூரியன் தொடங்கி வைத்தார்.

ஆண்கள் பிரிவில் ஆர்.என். பட்டியைச் சேர்ந்த குணாளன் முதலிடம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரிசாரதி 2-வது இடம், பன்னீர்குளத்தைச் சேர்ந்த கனிராஜா 3-வது இடம் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் விளாத்திகுளம் அரசு பள்ளி மாணவி ராதிகா முதலிடம், தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி பெண்கள் கல்லூரி மாணவி ஜெயபாரதி 2-வது இடம், பன்னீர்குளம் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி மாணவி முத்துலட்சுமி 3-வது இடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் ந.ரா.சாந்தி மகேஸ்வரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் கு.வெங்கடாசலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மின்னணுவியல் துணை உதவி பேராசிரியர் சிவராம சுப்பு மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்