மறைந்த ஒயிலாட்ட கலைஞர் கைலாசமூர்த்திக்கு புகழஞ்சலி - தூத்துக்குடி கல்லூாியில் நூல் வெளியீடு :

தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாியில், மறைந்த ஒயிலாட்ட கலைஞர் கலைமாமணி கைலாசமூர்த்தி குறித்த நூல் வெளியீடு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தூத்துக்குடி மாநகர கிளை, தூய மாியன்னைக் கல்லூாி, நியு செஞ்சுாி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அருட்சகோதாி லூசியா ரோஸ் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் அருட்சகோதாி புளோரா மோி, துணை முதல்வர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் முன்னிலை வகித்தனர். சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதாி ஜோஸ்பின் ஜெயராணி வரவேற்றார்.

கலைமாமணி கைலாசமூா்த்தி படத்தை எட்வின் சாமுவேல் திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தினார். தொடா்ந்து 'தமிழகத்தின் மக்தூம்- பொ.கைலாசமூா்த்தி' என்ற நூலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் பேராசிாியர் ராமசாமி வெளியிட்டு பேசினார். எழுத்தாளர் பிரபாகரன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

நூல் ஆசிரியர் நாட்டார் இயல் மைய இயக்குநர் ராமச்சந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் வாழ்த்துரை வழங்கினார். அருட்தந்தை செல்வராஜ், சாத்தூர் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டா் த.அறம், உதவி பேராசிரியை அருட்சகோதரி எழிலரசி, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில துணைச் செயலாளர் கண்ணகி, மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிர மணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மறைந்த கலைமாமணி கைலாச மூா்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பன்னாட்டு கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளியிடப் பட்டது. உதவி பேராசிரியர் சோனல் வெளியிட, அருட்சகோதாி ஆரோக் கிய ஜெனிலியஸ் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். தமிழ்த்துறை தலைவர் சாந்தி நன்றி கூறினார்.

கலைமாமணி கைலாசமூா்த்தி திருவுருவ படத்தை திறந்து வைத்து நூலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்