கோவை மாவட்டத்தில் - மெகா கரோனா தடுப்பூசி முகாம் :

கோவை மாவட்டத்தில் ஏழாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. ஊரக பகுதிகளில் 841, மாநகராட்சிப் பகுதிகளில் 271 என மொத்தம் 1,112 முகாம்கள் நடத்தப்பட்டன.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள், செவிலிய மாணவர்கள் ஈடு படுத்தப்பட்டனர். முகாமின்போது தடுப்பூசி போடுபவர்களின் விவரங்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 1.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போரும் தடுப்பூசி முகாமில் பயனடைந்த னர். நேற்று ஒரே நாளில் 71,166 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.

இதற்குமுன் நடைபெற்ற 6 முகாம்களில் மட்டும் மொத்தம் 6.68 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE