நீட் தேர்வு விலக்கு சட்டத்துக்கு - ஆளுநரின் ஒப்புதலை அரசு பெற வேண்டும் : பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாமக இளைஞர் அணித் தலைவர்அன்புமணி ராமதாஸ் நேற்றுதனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்திவாசன், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களைக் காக்க நீட் ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுநரின் ஒப்புதலைக் கூட பெறவில்லை. ஆளுநர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுநர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE