தீபாவளி பண்டிகையையொட்டி வடலூர் வாரச் சந்தையில் ரூ. 50 லட் சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை மாடு, ஆடு சந்தை நடக் கும். வடலூர், குறிஞ்சிப்பாடி, சேத்தி யாத்தோப்பு மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் விவசாயமும், அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பும் பிரதானத் தொழில். இதனால், வடலூர் வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்கு அதிக அளவில் வருவது வழக்கம். நேற்று வடலூர் வார சந்தைக்கு அதிகாலை முதலே அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தி யாத்தோப்பு, புவனகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு களை வாங்கினர். ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ 12 ஆயிரம் வரை விற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், " தீபாவளியையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆட்டு உரிமையாளர்களுக்கு நல்ல விலையும் கிடைத்தது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago