மேலூர், சிவகங்கை, சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள பெரியாறு விஸ்தரிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரி யாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதில் கடந்த ஆகஸ்ட் 11-லிருந்து 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது பெரியாறு அணை யிலும், வைகை அணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பெரியாறு விஸ்த ரிப்பு கால்வாய்களில் நேற்று தண் ணீர் திறந்துவிடப்பட்டது. அடுத்த 20 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலூர் வட்டம் மற்றும் சிவகங்கை, சிங்கம்புணரி வட்டங்களைச் சேர்ந்த 38,248 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினர் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago