அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று அதிகாலை வரை நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையில் ரூ.50,800 பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் மாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலகத்தில் இருந்த அனைவரையும் உள்ளே வைத்து கதவுகளை தாழிட்ட போலீஸார், அனைவரிடமும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அலுவலர்கள் சிலரிடமிருந்து ரூ.50,800-ஐ பறிமுதல் செய்து, பணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு பெண்களையும், நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆண்களையும் வெளியில் அனுப்பினர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago