திருநெல்வேலி ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக்கடைகளையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்திட குழு அமைக்கப்பட்டுள்ளது. சார் ஆட்சி யர் உட்பட 12 துணை ஆட்சியர்கள் நிலையிலும், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 105 அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடந்த 28-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு குறைபாடுகளுக்காக ரூ.43,500 அபராதமாக விதிக்கப் பட்டது. புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு www.tnpds.gov.inஎன்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது இ.சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இம்மனுக்கள் உரிய அலுவல ரால் விசாரணை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். இதன் பொருட்டு சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள் வழங்கல்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை நேரடியாகவோ அல்லது தொலை பேசி மூலமாகவோ அணுகலாம்.
குடும்ப அட்டை தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறை எண் 9342471314 -க்கு தொலைபேசி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தெரிவிக்கலாம்.
கூடுதல் நேரம் செயல்படும்
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை செயல்படும். தீபாவளிக்கு முன்னரே அத்தியா வசியப் பொருட்களை பெற விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த நாட்களில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.மேற்கண்ட நாட்களில் பொருட்கள் வாங்காத வர்கள் வழக்கம்போல வரும் 8-ம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago