சாத்தனூர் அணையில் இருந்து - விநாடிக்கு 820 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் :

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 820 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால், திருவண் ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பெய்து வந்த மழையின் தாக்கம் தொடர்கிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக செய்யாறு பகுதியில் 71 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், சேத்துப்பட்டில் 64, ஆரணியில் 21, செங்கத்தில் 22.6, ஜமுனாமரத்தூரில் 9, வந்தவாசியில் 31, போளூரில் 23.4, திருவண் ணாமலையில் 16, தண்டராம் பட்டில் 14, கலசப்பாக்கத்தில் 14.4, கீழ்பென்னாத்தூரில், வெம் பாக்கத்தில் தலா 11 மி.மீ., மழை என மாவட்டத்தில் சராசரியாக 26.55 மி.மீ., பெய்துள்ளது

அணைகள் நிலவரம்

119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக பராமரிக்கப்படு கிறது. அணையில் 3,392 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 820 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே வெளியேற் றப்படுகிறது. அணை பகுதியில் 12 மி.மீ., மழை பெய்துள்ளது.

59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக்கப் படுகிறது. அணையில் 647.60 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 150 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 21.32 அடியாக உள்ளது. அணையில் 78.056 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 150 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 9.4 மி.மீ., மழை பெய்துள்ளது.

62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 53.73 அடியாக உள்ளது. அணையில் 203 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 18 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE