ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் நபார்டு வங்கி சார்பில் ரூ.5,715 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நபார்டு வங்கி சார்பில் 2022-23-ம் நிதி யாண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், ரூ.5,715 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்.
கடன் திட்ட அறிக்கையில், வேளாண் விளைப் பொருட்கள் மற்றும் விற்பனை கடன் உதவி களாக ரூ.2,764 கோடியும், வேளாண் கட்டமைப்புக்கு ரூ.336 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
சிறு, குறு நிறு வனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.942 கோடியும், ஏற்றுமதி கடன் உதவிக்கு ரூ.60 கோடியும், கல்வி கடனுக்கு ரூ.303 கோடியும், வீட்டுக்கடனுக்கு ரூ.577 கோடியும், புதுப் பிக்கத்தக்க ஆற்ற பணிகளுக்கு ரூ.35 கோடியும், வங்கிகளின் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.38 கோடியும், முறைசாரா கடன் திட்டத்துக்கு ரூ.660 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ண ராஜ், நபார்டு வங்கி திட்ட மேலாளர் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago