சம்பங்கிப்பூ விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டும் அவலம் : விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

சம்பங்கிப்பூ விலை வீழ்ச்சியால் சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவில் சம்பங்கிப் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் விவசாயிகள் பூக்களை விற்று வருகின்றனர். இங்கிருந்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் விஜயதசமி, ஆயுதபூஜை ஆகிய நாட்களில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கிப் பூ, கடந்த சில நாட்களாக விலை குறைந்துள்ளது.

ஒரு கிலோ சம்பங்கிப்பூ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், பறிக்கும் கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேதனையடைந்த விவசாயிகள் சம்பங்கி பூக்களை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்