அரசின் விதிமுறைகளை மீறும் பட்டாசுக் கடைகள், குடோன்கள் மற்றும் நாட்டு வெடிமருந்து குடோன்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் சில்லரை பட்டாசுக் கடை நிரந்தர உரிமம் பெற்றசெல்வகணபதி என்பவரின் பட்டாசுக் கடையில் கடந்த 26-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டு 7 பேர்உயிரிழந்தனர். மேலும் 11 நபர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இதுபோன்ற விபத்து ஏற்படாத வண்ணம் கண்காணித்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.தர்கூறியது:
சங்கராபுரம் போன்ற விபத்துஎற்படாத வகையில் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அனைத்து பட்டாசு மற்றும் வெடிபொருள் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சரவணன்- 94450 00421, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து- 99652 58800, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையத் அப்துல் பாரீ - 94454 17265, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கி.சாய்வர்தினி - 94450 00422, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்சாந்தி- 63803 90018, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பிரகாஷ்வேல்-8405 56747 ஆகிய துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் பறக்கும் படை தலைமை அலுவலர்களாக செயல்படுவார்கள்.
பொதுமக்கள், பட்டாசுக் கடைகள் விதி மீறல்கள் குறித்த புகார் மற்றும் தகவல்களை 04151 - 228801 என்ற எண்ணிலும் மற்றும் பறக்கும் படை அலுவலர்களின் அலைபேசி எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago