மதுரை அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் மகேசுவரன் (30). வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதிநகரைச் சேர்ந்த சந்திரன், இவரது மகன் பிரேம்குமார், பிரதீப், ஜெயந்தி. இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் மகேசுவரனை அணுகி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை தெரிவித்துள்ளனர்.
இதற்காக ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அவர்கள் மகேசுவரனிடமிருந்து பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் அரசு வேலை வாங்கித் தர முயற்சிக்கவில்லை. கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்து ஏமாற்றினர். இது தொடர்பாக அண்ணாநகர் போலீசில் மகேசுவரன் அளித்த புகாரின்பேரில் சந்திரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago