தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் - எவ்வித கட்டுப்பாடுமின்றி உரங்கள் விற்க நடவடிக்கை : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சு.சிவராசு உறுதி

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பல்வேறு விவ சாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பேசும்போது, ‘‘தற் போது மழைக்காலம் தொடங்கி யுள்ளதால் அறுவடை செய்த நெல் முழுமையாக கொள்முதல் செய் யப்பட வேண்டும். திறந்தவெளியில் மழையில் நனைந்து நெல் வீணாகாமல் தடுக்க, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

யூரியா உரம் வாங்கும்போது கூடுதலாக கம்போஸ்ட் உரங்களோ, நுண்ணூட்டச் சத்துக்களோ கொள் முதல் செய்ய வேண்டும் என தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிர்பந்தம் செய்கின் றனர். பல இடங்களில் கேட்கும் உரத்தை வழங்குவதில்லை. தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் பெறாத விவசாயிகளுக்கும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் வழங்கப்பட வேண்டும். பாரபட்சமின்றி பயிர்க் கடன்கள் வழங்க வேண்டும்.

நிலுவையில் உள்ள விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். வேளாண் பணிகளுக்கு மணல் எடுத்துச் செல்லும் விவசாயிகளை தடுத்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கும்போக்கை காவல்துறை கைவிட வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையில் கிடைக்கும் தண்ணீரை ஏரிகளில் நிரப்பி, பாசனத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயி களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளித்து ஆட்சியர் சு. சிவராசு பேசியதாவது: திருச்சி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுதவிர 2 நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களும் உள்ளன. எனினும், தேவைக்கேற்ப கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். விண்ணப்பக் கட்ட ணம் முழுமையாக செலுத்தி, முன்னுரிமை அடிப்படையில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப் படும். காப்பீட்டுத்தொகை பெறாத விவசாயிகள் பட்டியலை சரி பார்த்து பெற்றுக் கொள்ளலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் எந்தவித கட்டுப்பாடுமின்றி, தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க உத்தரவிடப்படும். வேளாண் பணிகளுக்கு மண் எடுத்துச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தக் கூடாது என வருவாய்த்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று மணல் எடுக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, வேளாண் இணை இயக்குநர் முருகேசன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் விமலா, கூட்டுறவு இணைப் பதிவாளர் மு.தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்