கனமழையால் பாபநாசம் அணை நிரம்புகிறது ( -------- தென்காசி மழை செய்தியை இதன் கீழ் இணைக்கவும்,,,,,,,,,,, ) :

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. மழை நேற்று காலையிலும் நீடித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி டவுன், பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. திருநெல்வேலி டவுனில் முக்கிய சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். சந்தைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. ஆனால், கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 22 , சேர்வலாறு- 29, மணிமுத்தாறு- 21.8 , நம்பியாறு- 10 , கொடுமுடியாறு- 20 , அம்பாசமுத்திரம்- 32 , சேரன்மகாதேவி- 29.6 , நாங்குநேரி- 7.5, மூலக்கரைப்பட்டி- 30, பாளையங்கோட்டை- 20, திருநெல்வேலி- 13.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 134.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1044.56 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1404.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 282 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்