மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி :

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செவிலியர் பயிற்சி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. துறைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. கல்லூரி உதவி முதல்வர் சாந்தாராம், செவிலியர் கண்காணிப்பாளர் நிகிலாராணி, செவிலியர் பயிற்றுநர் செல்வன் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE