பாரம்பரிய உணவுத் திருவிழா :

திருநெல்வேலி சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி யில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமைப்படை சார்பில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் உ.கணேசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் முன்னிலை வகித்தார்.

பாரம்பரிய உணவின் அவசியம் பற்றி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் கோ கணபதி சுப்ரமணியன் விளக்க உரையாற்றினார். ஆசிரியை ரா.பிரேமா மேற்பார்வையில் 27 மாணவ - மாணவிகள் பாரம்பரிய உணவு வகைகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.பெருமாள், சிவில் சப்ளை முதுநிலை மண்டல மேலாளர் மணிகண்டன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குழந்தைசாமி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். சிறந்த உணவை காட்சிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE