இறைச்சி பொருட்கள் விழிப்புணர்வு முகாம் :

தேசிய உணவு தினத்தை முன்னிட்டு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மானூர் ஒன்றியம் களக்குடி கிராமத்தில் மதிப்பு கூட்டிய இறைச்சி பொருட்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அ.பழனிசாமி தொடங்கி வைத்து, கையேடுகளை வெளியிட்டார். களக்குடி ஊராட்சி தலைவர் ஆ.மாரிமுத்து மற்றும் களக்குடி நபார்டு உழவர் மன்ற தலைவர் மு.மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் மு.அண்ணா ஆனந்த், இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள் பற்றி விளக்கமளித்தார்.

கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் மூ.சுதா, இறைச்சி பொருட்கள் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்.

கால்நடை விரிவாக்கக் கல்வி துறையின் இணை பேராசிரியர் சே. செந்தில்குமார் வரவேற்றார். உதவி பேராசிரியர் இரா.சங்கமேஸ்வரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE