நெல்லை மாநகராட்சி மண்டல அலுவலர்கள் மீது நடவடிக்கை : மாநில தகவல் ஆணையர் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உரிய பதில் அளிக்காததால் மாநகராட்சியிலுள்ள 4 மண்டல அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள 4 மண்டலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறுதலாகவும், கூடுதலாகவும், விதிகளுக்கு முரணாகவும் உள்ளகட்டிடத்தை தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டத்தின்கீழ் பூட்டி சீல்வைக்க உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை திருநெல்வேலி வழக்கறிஞர் அ.பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு, கடந்த 13.1.2021-ம் தேதி மனு அனுப்பியிருந்தார். ஆனால், மாநகராட்சி சார்பில் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மனுதாரர் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதற்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு பின் மாநில தகவல் ஆணையர் ப. தனசேகரன் பிறப்பித்துள்ள உத்தரவில், “திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள 4 மண்டல அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்