ராணிப்பேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தொழிற் பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான ஆணைகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாபெரும் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனத்தினர் பங் கேற்று 8-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ படித்தவர்களை தேர்வு செய்தனர். முகாமில் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதில் 160 பேர் பயிற்சிக்காக தேர்வு செய் யப்பட்டனர்.
இவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணைகளை வழங்கி பேசும்போது, ‘‘இந்த முகாம் மூலம் தொழிற்சாலையை மேம்படுத்துவதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். முகாமில் 20 தொழிற் நிறுவனத்தினர் வந்துள்ளனர். ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் நிறு வனங்களுக்கு தேவைப்படு கின்றனர்.
ஆகவே இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. தொழிற் பழகுநர் பயிற்சியில் நன்றாக பணிபுரிந்தால் தொடர்ந்து அந்த நிறுவனத்திலேயே முழு நேர பணியாளராக பணியாற்றலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண் டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago