அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம் - சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் :

By செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம்தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம்நேற்று உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, கடந்த 26-ம் தேதி அழுகிய முட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக திருப்பூர் மாநகராட்சிஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் விசாரணை நடத்திய அதிகாரிகள், புகாரை உறுதி செய்தனர். இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவசண்முகம் கூறும்போது ‘‘கெட்டு போன முட்டைகள் குறித்து, மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல், சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவர், பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். தற்போது புதியமுட்டை விநியோகம் செய்யும்பணி நடந்து வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்