இரு பின்னலாடை நிறுவனங்களுக்கு அபராதம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டு பாலாஜி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணிகளை, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.

அப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மூலம் கொட்டப்படும் குப்பை, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பை தொடர்பாக சுகாதார ஊழியர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து அப்பகுதியில் இரண்டு தனியார் பின்னலாடை நிறுவனங்கள் குப்பையை முறையாக வெளியேற்றாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கு தலா ரூ. 5,000 வீதம், ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பாலித்தீன் கழிவுகள், எம்ப்ராய்டரி கழிவுகள் உட்பட தொழிற்சாலைக் கழிவுகளை முறையாக பின்னலாடை நிறுவனங்கள் வெளியேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனமாநகராட்சி ஆணையர் எச்சரிக்கைவிடுத்தார்.மக்கும் குப்பை,மக்காத குப்பைஎன குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கேத்தம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு பணிகளை பார்வை யிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்