ஈரோடு கங்காபுரம் டெக்ஸ் வேலி ஜவுளிச்சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஈரோடு அருகே கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி ஒருங் கிணைந்த ஜவுளிச்சந்தையில் 1500 ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. ஆண்,பெண், குழந்தைகளுக்கான முன்னணி நிறுவனங்களின் ரெடிமேட் ஆடைகள், பல்வேறு வகையான சேலைகள், சுடிதார்உள்ளிட்ட பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் இங்கு விற்பனைக்குள்ளன.
ஜவுளி உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை என்பதால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
தற்போது, டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தினம் தினம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டெக்ஸ்வேலி செயல் இயக்குநர் டி.பி.குமார் கூறியதாவது:
டெக்ஸ்வேலியில் இந்த ஆண்டு குழந்தைகள், சிறுவர், சிறுமி களுக்கான ஆடைகள் பல்வேறு டிசைன்களில் குவிந்துள்ளன. டெக்ஸ்வேலி பணியாளர்கள், கடை உரிமையாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டு இருப்பதுடன், அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகின்றன.பொதுமக்கள் வசதிக்காக ஈரோடு, பவானி, சித்தோடு, பெருந்துறை, கவுந்தப்பாடியில் இருந்து இலவச பேருந்துகள் டெக்ஸ்வேலிக்கு இயக்கப்படுகின்றன, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago