திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகம் கட்டுமானப் பணியையும் முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்தன. கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வுப் பணி நடந்தது. 7-ம் கட்ட அகழாய்வு கடந்த செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை தமிழக தொல்லியல் துறை ஆவணப்படுத்தி வருகிறது.
தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது
இதுதவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல், அதை பொதுமக்கள் பார்க்க வசதியாக திறந்வெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.15 மணி முதல் 2.15 மணி வரை கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகம் கட்டுமானப் பணியையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago