தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இதுவரை நடந்த ஆய்வில் ரூ.15 கோடி நகைக்கடன் முறை கேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரி வித்தார்.
திண்டுக்கல்லில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளை காப்பு விழா நடந்தது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். ப.வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழுந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார்.
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் ஐ.பெரி யசாமி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடந்த நகைக் கடன் முறைகேடு தொடர்பான ஆய்வில் ரூ.15 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக் காமலும் கடன் பெற்று முறைகேடு செய்துள்ளனர்.
இதுவரை 30 சதவீத கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற சங்கங்களிலும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
நகைக்கடன் முறைகேடு வழக் கில் தொடர்புடைய அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைவர்கள் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ் வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago