ஓ. பன்னீர்செல்வம், செல்லூர் கே.ராஜூ கருத்தால் தென் மாவட்ட அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான வட்டம் உருவாகியுள்ளதோ? என்ற குழப்பம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங் கியுள்ளார். இதற்காக அவர் அதிமு கவின் அதிருப்தியாளர்களிடம் செல்போனில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி இறப்புக்கு சசிகலா நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இருவருக்கும் இடையேயான அந்தச் சந்திப்பு உருக்கமாக இருந்தது.
இந்தச் சந்திப்பை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழ னிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. அது முதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கே.பழனிசாமிக்கும் இடையே பனிப் போர் தொடங்கியது.
இந்நிலையில் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியது கே.பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.
அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை எதிர்த்தே ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார் என்றும், அதிமுகவின் இரு அணிகள் இணைப்புப் பேச்சு வார்த்தையில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் எக்காரணத்தைக் கொண்டும் கட்சி யில் சேர்க்க கூடாது என்ற நிபந் தனையும் விதித்தார். இதனை நான் வெளிப்படையாக சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
ஆனால், கே.பழனிசாமி, தற் போது வரை சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் சசிகலாவை கட்சியில் சேர்க்க க்கூடாது என்றும் அதற்கான ஆலோ சனையே தேவையில்லை என்றும் கூறி வருகிறார். அதனால், கட்சிக்குள் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே முட்டல், மோதல் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள சசிகலா நேற்று மதுரை வந்தார். அவர் இன்று பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் துகிறார்.
இந்த பரபரப்பான சூழலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேவர் நினைவிடத்துக்கு வருகிறார். அதேநேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி பசும்பொன் வருவது குறித்து இன் னும் உறுதி செய்யப்படவில்லை.
மதுரை அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்பு கே.பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். தற்போது அவர்கள் கூட ஓ.பன்னீர் செல்வம் கூறிய கருத்துக்கு வெளிப் படையாக எதிர்ப்புத் தெரிவிக் கவில்லை. செல்லூர் கே.ராஜூ ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தென்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் செல்லூர் கே.ராஜூ பரிந்துரை செய்தோருக்கு கே.பழனிசாமி ‘சீட்’ வழங்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக அரசியல் செய் தவர்களுக்கே சீட் வழங்கினார். இதனால், வருத்தத்தில் இருந்த செல்லூர் ராஜூ தற்போது ஓ.பன்னீ செல்வம் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கட்சியினர் கூறுகின்றனர். அவரை போலவே தென் மாவட்ட அதிமுகவில் அதிருப்தி நிர்வாகிகள் பலர், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், சத்தமில்லாமல் தென் மாவட்ட அதிமுகவில் சசிகலா ஆதரவு வட்டம் உருவாகி கொண்டி ருக்கிறதோ? என்ற பதற்றம் கே.பழனி சாமி ஆதரவாளர்கள் மத்தியில் ஏற் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago