சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தனர். கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு, சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ் லிமிடெட், தொழில் முனைவோர் மற்றும் ஆலோசகர் சந்து நாயர் மற்றும் பெங்களூரு வெல்த்மேக்ஸ் குழும நிறுவனத்தின் தலைவர் முனைவர். ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினர்.

எம்பிஏ துறைத் தலைவர் அஞ்சனி வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், கார்த்திகேயன், காதர்நாவஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். முடிவில் துறைத் தலைவர் பத்மா நன்றி கூறினார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்