தி.மலை மாவட்டத்தில் நவம்பர் முதல் மூன்று நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நியாய விலை கடைகள் திறந்திருக்கும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை அனைத்து நியாய விலை கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். அந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள் ளலாம்.
மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நிற்க வைக்காமல், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பொருட் களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் முறைகேடு நடைபெற்று இருந்தால் 04175 – 233063 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago