கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமிகள் வீதி உலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில், ஒரு பகுதியாக தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சரதங்களை சீமைக்கும் பணிக்காக, பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகடு மற்றும் ஃபைபர் கண்ணாடி அகற்றப்பட்டுள்ளன. மேலும், மாட வீதியில் உற்சவமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாகனத்துக்கும் நேர்த்தியாக வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago