தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் (கூட்டுறவு சர்க்கரை ஆலை பிரிவு) சார்பில் கோரிக்கை விளக்க மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் அரிதாஸ் வரவேற்றார். மாநில செயலாளர் பெருமாள் தொடக்க உரையாற்றினார். புதுடெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங் கேற்ற கரும்பு விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய தலைவர் ரவீந்திரன் சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில், “ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசலுடன் 50 சதவீத எத்தனாலை கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளிநாட்டு சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிவிட்டு உள்நாட்டு சர்க்கரை விலையை குறைக்கக்கூடாது, 2021-ம் ஆண்டு அரவை பருவத்துக்கான பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், அரவை பருவம் தொடங்குவதற்கு முன்பாக முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிர்வாகிகள் பாபு, பால்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago