தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் - பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை : பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் : மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பிளாஸ்டிக் அல்லாத பைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் மும்முரமாக உள்ளனர். ஆடைகள், இனிப்புகள், காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறி மற்றும் சந்தைகளில் அதிகளவில் மக்கள் குவிகின்றனர். கடைகள், பல் பொருள் அங்காடிகள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் விற்பனை நடைபெற்று வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்கை நிறுத்துவதற்கான அளவு மற்றும் தடிமன் உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் கேரி பைகள் உட்பட பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், கப், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மோகோல் கப், பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், பிளாஸ்டிக் தாள், உணவு மடிப்புக்கு பயன்படுத்தப்படும் தாள்கள், தண்ணீர் பொட்டலங்கள், பைகள், பிளாஸ்டிக் வைக்கோல், பிளாஸ்டிக் கொடிகள் முதலிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது பிளாஸ்டிக் அல்லாத பைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்குவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது பிளாஸ்டிக் அல்லாத பைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்குவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்