பொன்னை அடுத்த கீரைசாத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் - மழையில் நனைந்து நாற்று முளைத்த நெல் மூட்டைகள் : விரைவாக கொள்முதல் செய்ய கோரிக்கை

By செய்திப்பிரிவு

பொன்னை அருகேயுள்ள கீரைசாத்து கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1,500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருப்பில் வைத் துள்ளதால் நாற்று முளைத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை, கீரைசாத்து, மாதாண்டகுப்பம், மேல்பாடி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தனியார் வியாபாரிகளுக்கு நெல்லை விற்று வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீரைசாத்து பகுதியில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

தற்போது வரை இயங்கி வரும் இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து சுமார் 8 ஆயிரம் நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்துள்ளனர். சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை மட்டும் அடுத்து வரவுள்ள காலங் களில் கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால், அதிகாரிகள் கூறியபடி இதுவரை தேங்கியுள்ள மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் வெட்ட வெளியில் மழை மற்றும் வெயில் இருப்பதுடன் பல மூட்டைகளில் நாற்று முளைத்து பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியுள்ளது.

ஏற்கெனவே, அதிகாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் நெல் மூட்டைகளில் 900 மூட்டைகளுக்கான பணத்தை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேங்கியுள்ள நெல் மூட்டைகளில் நாற்று முளைத் திருப்பதைப் பார்த்து வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நிலுவையில் வைத்துள்ள 1,500 நெல் மூட்டைகளையும் விரை வாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கீரைசாத்து மையத்தில் இருந்து இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் மூட்டைகளுக்கு உரிய பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு இடைத்தரகர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை கொண்டு வந்துள் ளதாக புகார் வந்ததால் சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் வைத்துள்ளோம்.

அடுத்த இரண்டு நாட்களில் விவசாயிகளின் ஆவணங்களை சரிபார்த்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்