விழுப்புரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய பாக்கியை வழங்க வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, அபிமன்னன் மாவட்ட துணைத்தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். இதுவரை வேலை செய்த ஐந்து வார ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக்கி தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago