கால் மற்றும் வாய்காணை நோய் - மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது : 2,17,050 மாடுகள் பயன்பெறும்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்(NADCP) கால் மற்றும் வாய்காணை நோய் தடுப்பு திட்டம் 2-வது சுற்று தொடங்கியது.

கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்காணை நோய் ஏற்படுவதை தடுக்க தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் கால் மற்றும் வாய்காணை நோய் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பாண்டு இந்த நோய் வருவதைத் தடுக்க, இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 2,66,598 மாடுகள் உள்ளன. இதில், 2,17,050 மாடுகளுக்கு தடுப்பூசி போட தகுதியானவை.

கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான 71 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடுகின்றனர். கால்நடை வளர்ப்போர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்