திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி உற்சவம் நவ.4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நாட்களில் கோயிலில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதியில் லை என கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலில் நவ.4-ம் தேதி சுவாமிக்கு காப்புக் கட்டுதல், 8-ம் தேதி வேல் வாங்குதல், 9-ம் தேதி சூரசம்ஹாரம், 10-ம் தேதி பாவாடை தரிசனம் நடை பெறும். இவ்விழாக்கள் அனைத்தும் கோயிலுக் குள்ளேயே நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதியில்லை. திருவிழாக்கள் மற்றும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. சுவாமி புறப்பாடு மண்டகப்படி நடத்த அனுமதியில்லை என அவர் தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago