திருப்பரங்குன்றம் கோயிலில் - கந்த சஷ்டி நவ.4-ல் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி உற்சவம் நவ.4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நாட்களில் கோயிலில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதியில்லை என கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலில் நவ.4-ம் தேதி சுவாமிக்கு காப்புக் கட்டுதல், 8-ம் தேதி வேல் வாங்குதல், 9-ம் தேதி சூரசம்ஹாரம், 10-ம் தேதி பாவாடை தரிசனம் நடை பெறும். இவ்விழாக்கள் அனைத்தும் கோயிலுக் குள்ளேயே நடைபெறும்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதியில்லை. திருவிழாக்கள் மற்றும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. சுவாமி புறப்பாடு மண்டகப்படி நடத்த அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்