மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனாட்சியம்மன் கோயிலில் அக்.31 அன்று ஐப்பசி பூரம் நடைபெற உள்ளது.
நவ.4 தீபாவளியன்று மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக்கவசம், சொக்க நாதருக்கு வைர நெற்றிப் பட்டை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெறும்.
கோலாட்ட உற்சவம் நவ.4 முதல் 9 முடிய மாலை 6 மணி யளவில் மீனாட்சி அம்மன் எழுந் தருளி ஆடிவீதியில் புறப்பாடு நடைபெறும். நவ.8-ம் தேதி மாலை 6 மணியளவில் மீனாட்சியம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். 9-ம் தேதி மாலை 6 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடாகும்.
கந்தசஷ்டி உற்சவம் நவ.4-ம் தேதி முதல் 9-ம் தேதி முடிய நடைபெறும். நவ.10-ம் தேதி காலை 7 மணியளவில் முத்துக் குமார சுவாமி வெள்ளிக்கவசம் (பாவாடை) சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங் காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago