மதுரை தெப்பக்குளம் அருகே ரூ.2 கோடியில் மீனாட்சியம்மன் கோயில் சார்பில் உணவு வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தில் தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரவும், அவர்கள் ஒரே இடத்தில் அனைத்துப்பொருட்களை வாங்கவும், சாப்பிடும் வகையில் சாலையோர வியா பாரிகளை ஒருங்கிணைத்து உணவு வணிக வளாகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்தில் சென் னை, மதுரை மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தெருவோர உணவு வணிக வளாகம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியில் இந்தத் திட்டத்தில் 100 வார்டுகளிலும் உள்ள டீ கடைகள், தெருவோர தள்ளு வண்டி கடைகள், பூக்கடைகள், காய் கறி கடைகள் உள்ளிட்டவற்றை கணக்கெடுத்து, அவர்களை இந்தத் திட்டத்தில் சேர்க்க அடையாள அட் டைகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த வியாபாரிகள் எங்கெங்கு இருக் கிறார்களோ, அங்கேயே அவர்களுக்கு ஒரு சிறிய பகுதியில் தெருவோர உணவு வணிக வளாகங்களை அமைத்துக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மதுரையில் தெப்பக்குளம், டவுன் ஹால் ரோடு, வடக்குச் சித்திரை வீதி, டிபிகே ரோடு ஆகிய நான்கு இடங்களில் தெருவோர உணவு வணிக வளாகம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக தெப்பக்குளம் அருகே ரூ.2 கோடியில் உணவு வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago