மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மதுரையில் மருது பாண்டியர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
மாரியம்மன் தெப்பக்குளம் அருகிலுள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு, கிழக்கு தொகுதி தலைவர் எம்.ஜெயப்பிரகாசம் தலைமையில் கைத்தறி தொழிற்சங்கத் தலைவர் ஏ.எஸ்.ரவீந்திரன் முன்னிலையில், புறநகர் தலைவர் கே.பாக்கியம், மத்திய தொகுதி தலைவர் பி.சேகர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
மாநகர் பொருளாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம், புறநகர் துணைத் தலைவர் மா.பிச்சை, மாநகர் செயலாளர் ஜே.முத்துச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு தொகுதி செயலாளர் என்.ஆர்.சந்திரசேகர் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago